வேளச்சேரி: வேளச்சேரி நாடார் நல்வாழ்வு சங்கத்தின் கவுரவ தலைவரும், தொழிலதிபருமான ராமச்சந்திரன்(81), உடல் நலக்குறைவு காரணமாக நேற்றிரவு காலமானார். மக்கள் அஞ்சலிக்காக வேளச்சேரி வெங்கடேஸ்வரா நகரில் உள்ள அவரது இல்லத்தில் உடல் வைக்கப்பட்டுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் ராதிகா செல்வி, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், சமத்துவ மக்கள் கட்சி துணைத் தலைவர் நாராயணன் எம்எல்ஏ, வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் அசோக், நாடார் பாதுகாப்பு பேரவை தலைவர் சுபாஷ் பண்ணையார், சிம்மப்பேரவை தலைவர் இராவணன் ராமசாமி, பாஜ தென்சென்னை மாவட்ட தலைவர் காளிதாஸ், மண்டல தலைவர் திருப்புகழ், தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா, மயிலை பெரியசாமி, போரூர் ஆனந்தராஜ், சாத்தான்குளம் ஆனந்தராஜ், கணேசன், வேளச்சேரி பரஞ்சோதி செல்வராஜ், ஜி.டி.முருகேசன், மாரித்தங்கம், சந்திரன் ஜெயபால், மின்னல் ஸ்டீபன், நடிகர் பயில்வான் ரங்கநாதன், ராஜகோபால், ராஜசேகர், ஜேம்ஸ் வில்லியம், சுந்தர பச்சையப்பன் உள்பட பலர் மலர் அஞ்சலி செலுத்தினர். இன்று மாலை 4 மணிக்கு இறுதி ஊர்வலம் நடக்கிறது. வேளச்சேரியில் உள்ள சுடுகாட்டில் உடல் தகனம் செய்யப்படுகிறது.