ஆபாச கமென்ட் நடிகை ஆவேசம்
சென்னை:ஆபாசமாக கமென்ட் வெளியிட்ட ரசிகர்கள் மீது பாய்ந்தார் இளம் நடிகை ஹன்சிபா.ஸ்ருதிஹாசன், ரம்யா உள்ளிட்ட பல ஹீரோயின்கள் இணைய தள பக்கத்தில் தங்கள் கருத்துக்களை வெளியிடுகின்றனர். சில குறும்புக்கார ரசிகர்கள், நடிகைகளை விமர்சித்து கமென்ட்ஸ் வெளியிடுகின்றனர். இன்னும் சிலர் ஆபாசமாக கமென்ட்ஸ் போடுகின்றனர். இதற்கு ஹீரோயின்கள் கண்டனம் தெரிவித்ததுடன் சில சமயம் போலீசில் புகாரும் கொடுத்திருக்கின்றனர். அப்படியொரு சூழலில் சிக்கி இருக்கிறார் இளம் நடிகை ஹன்சிபா.
மோகன்லால் நடித்த ‘திரிஷ்யம்' என்ற மல்லுவுட் படத்தில் நடித்தவர் ஹன்சிபா. அவர் கூறும்போது,‘மற்ற பிரபலங்களைப்போல் நானும் என்னுடைய புகைப்படங்களை எனது இணைய தள பக்கத்தில் வெளியிட்டேன். இதில் ஆபாச ஸ்டில்கள் எதுவும் கிடையாது. முழுகை சட்டை அணிந்தபடி இருக்கும் ஸ்டில்களை வெளியிட்டாலும் அதற்கு சிலர் ஆபாசமாக கமென்ட்ஸ் போடுகிறார்கள். இது எனக்கு கோபத்தையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியது. ஆனால் எனது தோழிகள் ஆறுதல் கூறினர். இதுபோன்ற ஆபாச கமென்ட்ஸ்களை கண்டுகொள்ளாமல் உன் படங்களை நீ தொடர்ந்து வெளியிடு என்றனர். அன்றுமுதல் அதுபோன்ற கமென்ட்ஸ் வந்தால் அதை படிப்பதில்லை. வேலை இல்லாமல் வெட்டியாக இருக்கும் சிலர்தான் இதுபோன்ற கமென்ட்ஸ் போடுகின்றனர். 24 மணிநேரமும் அவர்கள் கமென்ட் போடுகிறார்கள் என்றால் அவர்களுக்கு வேறு வேலை என்ன இருக்கப்போகிறது' என்றார்.