வேலை இல்லாததால் தொழிலாளி தற்கொலை
ஊத்துக்கோட்டைஊத்துக்கோட்டை அருகே வேலை கிடைக்காத விரக்தியில் தொழிலாளி விஷம் கலந்த உணவு சாப்பிட்டு தற்கொலை செய்தார்.
ஊத்துக்கோட்டை அருகே வெங்கடாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் தேசையா (36). மூட்டை தூக்கும் தொழிலாளி. மனைவி சீராலு (37). இவர்களுக்கு திருமணம் ஆகி 10 ஆண்டு ஆகிறது. ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த சில தினங்களாக தேசை யாவுக்கு வேலை கிடைக்கவில்லை. இதனால் மனவருத்தம் அடைந்தார். நேற்று மாலை உணவில் விஷம் கலந்து சாப்பிட்டார். வீட்டில் மயங்கி கிடந்த அவரை மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். புகாரின் பேரில் பென்னலூர் பேட்டை எஸ்.ஐ. நரேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறார்.