இந்து முன்னணி செயலாளர் முதலாமாண்டு நினைவு தினம்
திருக்கழுக்குன்றம்கடந்த ஆண்டு வேலூரில் படுகொலை செய்யப்பட்ட இந்து முன்னணி மாநில செயலாளர் வெள்ளையப்பனின் முதலாமாண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி இந்து முன்னணி சார்பில் திருக்கழுக்குன்றத்தில் நேற்று நடந்தது. இந்நிகழ்சிக்கு மாவட்ட செயலாளர் மணிகண்டன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் ராஜா முன்னிலை வகித்தார். வெள்ளையப்பனின் உருவப் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி, உறுதி மொழி வாசித்தனர். இதில் நிர்வாகிகள் மணி, சரவணன், ராமவரதன், ஏழுமலை உட்பட பலர் கலந்து கொண்டனர்.