100 மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம்
திருக்கழுக்குன்றம்திருக்கழுக்குன்றம் அருகே ஈகை கிராமத்தில் 100 மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம், 200 முதியோருக்கு இலவச வேட்டி, சேலைகளை டிஎஸ்பி மோகன் வழங்கினார்.திருக்கழுக்குன்றம் அடுத்த முள்ளிகொளத்தூர் ஊராட்சி ஈகை கிராமத்தில் உள்ள ஜீவா நினைவு அறக்கட்டளை பள்ளி சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. அறக்கட்டளை நிறுவனர் பாபு தலைமை வகித்தார். டிஎஸ்பி மோகன் முன்னிலை வகித்து 100 மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம், 200 முதியோருக்கு இலவச வேட்டி, சேலைகளை வழங்கினார். பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடந்தது. அறக்கட்டளை இயக்குனர் கோமளாவதி பாபு நன்றி கூறினார்.