நைஜீரியாவில் சர்ச் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் 30 பேர் பலி
பவுச்சி: நைஜீரியாவில் 4 சர்ச்கள் மீது போகோ ஹரம் தீவிரவாதிகள் நேற்று திடீர் தாக்குதல் நடத்தினார்கள். இதில் 30 பேர் பலியானார்கள்.நைஜீரியாவில் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளை ஒருங்கிணைத்து தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்று போகோ ஹரம் என்ற தீவிரவாத குழு ஆயுத போராட்டம் நடத்திவருகிறது.இந்நிலையில், சிபோக் நகருக்கு அருகே கிறிஸ்தவர்கள் வசிக்கும் கவாடா கிராமத்தில் நேற்று காலை சர்ச் களில் பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது. அப்போது அங்கு லாரிகளில் வந்த போகோ ஹரம் தீவிரவாதிகள் கும்பல், அங்கிருந்த 4 சர்ச்கள் மீது துப்பாக்கி தாக்குதல் நடத்தினர்.இந்த தாக்குதலில் 30 பேர் பலியானார்கள். அமெரிக்க கிறிஸ்தவ அமைப்பினால் உருவாக்கப்பட்ட 3 சர்ச்களையும் தீவிரவாதிகள் அடித்து சேதப்படுத்தினர். சர்ச் தாக்குதலுக்கு பிறகு அங்குள்ள வீடுகளையும் தீவிரவாதிகள் தீ வைத்து எரித்தனர். பின்னர் அங்கிருந்து தப்பினர். போகோ ஹரம் தீவிரவாதிகளிடம் இருந்து பாதுகாப்பதில் நைஜீரிய அரசு மெத்தனம் காட்டி வருகிறது என்று துப்பாக்கி தாக்குதலில் உயிர் தப்பிய கிறிஸ்தவ மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.