போதையில் செக்ஸ் டார்ச்சர் மறுத்த மனைவிக்கு வெட்டு கணவன் கைது
மயிலாடுதுறை: நாகை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த மன்னம்பந்தல் செங்கமேட்டுத்தெருவை சேர்ந்தவர் முருகன்(46). பம்ப்செட் மெக்கானிக். குடிப்பழக்கம் உடையவர். இவர் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவி அஞ்சாம்மாளுக்கு செக்ஸ் டார்ச்சர் செய்துவந்தார். இதனால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்படும்.நேற்று முன்தினம் இரவு முருகன் மதுகுடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். அனைவரும் சாப்பிட்டு தூங்கிவிட்டனர். நள்ளிரவு போதையில் முருகன், மனைவி அஞ்சாம்மாளை(35) செக்ஸ் டார்ச்சர் செய்துள்ளார். அவர் மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த முருகன், திட்டியதுடன், வீட்டில் கிடந்த அரிவாளை எடுத்து சரமாரியாக மனைவியை வெட்டினார். சத்தம் கேட்டு கண்விழித்த அஞ்சம்மாளின் தாய் லட்சுமி, முருகனுடன் போராடினார். அப்போது அவரையும் முருகன் வெட்டிவிட்டு ஓடிவிட்டார். படுகாயமடைந்த 2 பேரையும் உறவினர்கள் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 2 பேரும் ஆபத்தான நிலையில் உள்ளதால் மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மயிலாடுதுறை போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிந்து முருகனை கைது செய்தனர்.