திருவல்லிக்கேணியில் தங்கக் கட்டிகளை பங்கு பிரிப்பதில் தகராறுகைதான 3 பேரிடம் விசாரணை
சென்னை: தங்க கட்டிகளை பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட மோதலில் திருவல்லிக்கேனி லாட்ஜில் தங்கியிருந்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். திருவல்லிக்கேனி மாரிமுத்து தெருவில் உள்ள ஒரு லாட்ஜில் நேற்று காலை 3 பேர் ஒரு அறையை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர். இவர்கள் 3 பேருக்குமிடையே நேற்று மாலை மோதல் ஏற்பட்டது. இது குறித்து லாட்ஜ் மேலாளர் திருவல்லிக்கேனி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். மேலும் அவர்கள் தங்கியிருந்த அறையில் சோதனை நடத்திய போது, தங்க கட்டிகள் இருந்துள்ளது.போலீசார் நடத்திய விசாரணையில், வெளி மாநிலத்தை சேர்ந்த இக்பால்(32), ஹமீது(26), கோபிநாத்(27) என்பது தெரியவந்தது. இந்த மோதலில் கோபிநாத், இக்பாலை சுத்தியலால் தலையில் தாக்கியுள்ளார். மேலும் அவர்கள் இருந்த அறையில் பிடிபட்ட தங்க கட்டிகள் வெளிநாடுகளில் இருந்து கடத்தி கொண்டு வரப்பட்டதா? அல்லது கொள்ளையடித்த நகைகளா? என்பது குறித்து போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.