Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2014
26
Jun
நைட் பார்ட்டியில் அஞ்சலி பாய்பிரண்டுடன் குத்தாட்டம்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

சென்னை: நைட் பார்ட்டியில் பாய்பிரண்டுடன் அஞ்சலி குத்தாட்டம் போட்ட காட்சி இணைய தளத்தில் வலம் வருகிறது.சேலை கட்டிக்கொண்டு அடக்க ஒடுக்கமாக நடித்துக்கொண்டிருந்த அஞ்சலி கவர்ச்சி போட்டியில் காணாமல்போய்விடக்கூடாது என்பதற்காக ‘கலகலப்பு படத்தில் கிளாமரில் அசத்தினார். இந்நிலையில் களஞ்சியம் இயக்கிய ‘ஊர் சுற்றி புராணம் படத்தில் ஏற்பட்ட பிரச்னையாலும், தனது சித்தியுடன் ஏற்பட்ட மோதலாலும் மனம் உடைந்து கோலிவுட்டுக்கு முழுக்குபோட்டுவிட்டு டோலிவுட்டில் நடிக்கச் சென்றார். சில மாதங்கள் எங்கு தங்கி இருக்கிறார் என்ற தகவல்கூட தெரிவிக்காமல் இருந்து வந்தார். இந்நிலையில் அவர் மீண்டும் தமிழ் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் பரவியதையடுத்து தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தில் களஞ்சியம் புகார் அளித்தார். இதையடுத்து களஞ்சியம் படத்தில் நடிக்காமல் வேறு படத்தில் நடிக்கக்கூடாது என்று அஞ்சலிக்கு சங்கம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மேலும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் கில்டு சங்கம் சார்பில் மற்ற மொழி பட சங்கங்களுக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டது. அதில் தமிழ் படத்தில் நடித்து முடிக்கும்வரை பிறமொழியில் நடிக்க அவரை அனுமதிக்கக்கூடாது என்று அதில் கூறப்பட்டிருந்தது.விஷயம் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கும் தருணத்தில் அஞ்சலியோ எதைப்பற்றியும் கண்டுகொள்ளாமல் உள்ளார். சமீபத்தில் தனது நண்பர்களுடன் நடந்த நள்ளிரவு விருந்தில் பங்கேற்று அவர்களுடன் குத்தாட்டம் போட்டார். இந்த புகைப்படங்கள் இணைய தளத்தில் வலம் வந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement
Advertisement