தஞ்சை பெரிய கோயிலில் ஆஷாட நவராத்திரி விழா நாளை மறுநாள் துவக்கம்
தஞ்சை: தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலில் உள்ள மகா வராகி அம்மனுக்கு ஆண்டுதோறும் ஆஷாட நவராத்திரி விழா கொண்டாடப்படும். 12வது ஆண்டு பெருவிழா நாளை மறுநாள்(27ம் தேதி) தொடங்கி ஜூலை 7 வரை நடக்கிறது.வரும் 27ம் தேதி வராகி அம்மனுக்கு இனிப்பு, 28ல் மஞ்சள், 29ல் குங்குமம், 30ல் சந்தனம், ஜூலை 1ல் தேங்காய்ப் பூ, 2ல் மாதுளை, 3ல் நவதானியம், 4ல் வெண்ணெய், 5ல் கனிவகை, 6ல் காய்கறி, 7ல் புஷ்ப அலங்காரம் நடக்கிறது. ஜூலை 7ம் தேதி இரவு பூச்சொரிதல் நிகழ்ச்சி, அம்மன் திருவீதியுலா நடக்கிறது. தினமும் காலை 8 முதல் 10 மணி வரை சிறப்பு வராகி ஹோமம், சிறப்பு அபிஷேக தீபாராதனை, மாலை 6 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடக்கிறது. ஜூலை 2ம் தேதி பஞ்சமி தினத்தையொட்டி வராகி அம்மனுக்கு பஞ்சமி அபிஷேகம், 1000 பேருக்கு சிறப்பு நைவேத்ய பிரசாதம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஆஷாட நவராத்திரி குழுவினர் செய்துள்ளனர்.