ஊட்டி மலை ரயில் கட்டணம் உயர்வு
ஊட்டி: ஊட்டி-குன்னூர் இடையே மலை ரயில் கட்டணம் ரூ.92 ஆக உயர்ந்துள்ளது. மத்தியில் பாஜ., அரசு பொறுப்பேற்றவுடன் ரயில் கட்டணத்தை உயர்த்தியது. இதனால் ஊட்டி மலை ரயிலிலும் கட்டணம் உயர்ந்துள்ளது. இதன்படி, ஊட்டி மலை ரயிலில் ஊட்டி & குன்னூர் இடையே ரூ.85ஆக இருந்த முதல் வகுப்பு கட்டணம் ரூ.92 ஆகவும், இரண்டாம் வகுப்பு கட்டணம் ரூ.5ல் இருந்து ரூ.10 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. ஊட்டி & குன்னூர் இடையே உள்ள லவ்டேல், கேத்தி, அருவங்காடு வரை ரூ.5 வசூலிக்கப்படும். ஊட்டி & மேட்டுப்பாளையம் இடையே முன்பதிவு கட்டணமாக முதல் வகுப்பிற்கு ரூ.50ம், இரண்டாம் வகுப்பிற்கு ரூ.15ம் வசூலிக்கப்படும். ஊட்டி & மேட்டுப்பாளையம் இடையேயான கட்டணத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. இப்பாதையில் பழைய கட்டணமான முதல் வகுப்பிற்கு, ரூ.145ம், இரண்டாம் வகுப்பிற்கு ரூ.15ம் கட்டணமே வசூலிக்கப்படும் என ரயில்வேதுறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.