தஞ்சை: தஞ்சை செங்கிப்பட்டி அரு கில் உள்ள யாகப்பா பன் னாட்டு உண்டு உறைவிட பள்ளி கூடுதல் கட்டிடங் களை முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் திறந்து வைத்தார்.தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகில் உள்ள மேரீஸ் நகரில் யாகப்பா பன்னாட்டு உண்டு உறைவிட பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கு நவீன வசதிகளுடன் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா கோலாகலமாக நடந்தது. பள்ளியின் நிர்வாக அறங்காவலர் மேரிஞானம்,அறங்காவலர் பிரான்சிஸ்யாகப்பா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.பள்ளி தாளாளர் எட்வர்டு ஆரோக்கியராஜ் வரவேற்றார். முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் விழாவில் கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் பள்ளியை சுற்றி பார்த்தார். வகுப்பறைகளும், பள்ளி வளாகமும் சிறப்பாக செயல்பட்டு வருவதாக வாசன் பாராட்டு தெரிவித்தார். அகில இந்திய காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் ஜி.ஆர்.மூப்பனார், ஞானம் மேலாண்மை பள்ளி இயக்குநர் செல்வராஜ்,பரிசுத்தம் பொறியியல் கல்லூரி தலைவர் எஸ்.பி.அந்தோணி சாமி, தொழிலதிபர்கள் பி.எல்.ஏ.சிதம்பரம், சுரேஷ்மூப்பனார்,திருச்சி மான்ட்போர்ட் பள்ளி மரியண் ணன், தன்ராஜ், ஆர்.கே.எஸ். பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சுரேந்தர் மற்றும் தொழிலதிபர்கள், பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர். முன்னதாக மாணவ,மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.