மத்திய அரசின்
இரும்பு மற்றும் எஃகு சுரங்க அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சத்தீஸ்கர்
மாநிலத்தில் உள்ள பைலாடிலா இரும்புத்தாது சுரங்கத்தில் காலியாக உள்ள 166
டெக்னீசியன் பணியிடங்களுக்கு 8ம் வகுப்பு/ ஐடிஐ படித்தவர்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அனைத்து
பணிகளுக்கும் 1.6.2025 தேதிப்படி 30க்குள். எஸ்சி., எஸ்டியினருக்கு 5
ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், முன்னாள் ராணுவத்தினருக்கு
அவர்கள் பணியிலிருந்த ஆண்டுகள் அடிப்படையில் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு
அளிக்கப்படும். Maintenance Assistant (Trainee)/ (Mech.,/ Elect)
பணிகளுக்கு எழுத்துத்தேர்வு, டிரேடு தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வுகள்
நடத்தப்படும். Field Assistant (Trainee) பணிக்கு எழுத்துத்தேர்வு, உடல்
திறன் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வுகள் நடத்தப்படும்.
தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு
18 மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும். முதல் ஆண்டில் ரூ.9 ஆயிரமும், அடுத்த 6
மாதங்கள் ரூ.9,500 வீதமும் ஊக்கத் தொகை வழங்கப்படும். பயிற்சியை முடித்த
பின் Maintenance Assistant (Tr) (Mech/ Elect) பிரிவினர் ரூ.11,300 - 3% -
20,000 என்ற சம்பள விகிதத்திலும், Field Assistant (Tr) பிரிவினர்
ரூ.11,000 - 3% - 19,410 என்ற சம்பள விகிதத்திலும் நிரந்தர பணியில்
அமர்த்தப்படுவர்.
விண்ணப்ப கட்டணம்:
ரூ.50.
இதை NMDC Limited, BIOM Bacheli Complex என்ற பெயரில் 'Bacheli'ல்
செலுத்தும் வகையில் ஏதேனும் ஒரு ஸ்டேட் வங்கியில் டிடி எடுக்க வேண்டும்.
மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.nmdc.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
Assistant General Manager (Personnel), R-P, Bailadila Iron Ore Mine, Bacheli Complex, Post Office: Bacheli, SOUTH BASTAR District. DANTEWADA, Chattisgarh 494 553.