கொலையான இந்து முன்னணி தலைவர் சுரேஷ்குமார் குடும்பத்துக்கு ரூ10 லட்சம் இழப்பீடு விசுவ இந்து பரிஷத் வலியுறுத்தல்
நாகர்கோவில்: குமரி மாவட்ட விசுவ இந்து பரிஷத் நிர்வாகிகள் கூட்டம் பார்வதிபுரத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் தாணுமாலய பெருமாள் தலைமை வகித்தார். செயலாளர் காளியப்பன், இணை செயலாளர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி தலைவர் சுரேஷ்குமார் கொலை செய்யப்பட்டதை கண்டிப்பதோடு கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்துகிறோம். சுரேஷ்குமார் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், ரூ.10 லட்சம் இழப்பீடும் அரசு வழங்க வேண்டும். ஆகஸ்ட் 17ல் கிருஷ்ணஜெயந்தி அன்று எல்லா ஒன்றியங்களிலும் இருசக்கர வாகன பேரணி நடத்தப்படும். டிசம்பர் மாதம் குமரி மாவட்ட மாநாடு நடத்தப்படும். வில்லுக்குறி காரவிளை பகுதியில் அத்துமீறி போலீசார் தாக்குதல் நடத்தியதற்கும், பொருட்களை பறிமுதல் செய்ததற்கும் கண்டனம் தெரிவிக்கிறோம். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.