ஆவடி: ஆவடி அருகே அயப்பாக்கம் போதை பொருள் தடுப்பு பிரிவு குடியிருப்பில் வசிப்பவர் ஜோசிபிரான்சிஸ். இவரது மகன் ஆலன் பிரான்சிஸ் (17). இவரை ஆவடியில் உள்ள மத்திய அரசு பள்ளியில் பிளஸ் 2 சேர்த்தனர். இன்று முதல்நாள் வகுப்புக்கு செல்ல இருந்தார்.இந்நிலையில், இன்று காலை வீட்டில் ஆலன் பிரான்சிஸ் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதை பார்த்த பெற்றோர் கதறி துடித்தனர்.மற்றொரு சம்பவம்:அம்பத்தூர் வரதராஜபுரம் பார்த்தசாரதி நாயுடு தெருவில் வசித்தவர் குத்புதீன் (55). ஆட்டோ டிரைவரான இவர் சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இந்த நிலையில், நேற்று வீட்டில் இருந்த குத்புதீன் தூக்கிட்டு இறந்தார். அவருக்கு அபுதாபி என்ற மனைவி உள்ளார். ‘ என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. கடன் தொல்லையால் தற்கொலை செய்ய முடிவு எடுத்தேன் என்று குத்புதீன் கடிதம் எழுதி வைத்துள்ளார். இந்த இரு சம்பவம் குறித்து திருமுல்லைவாயல், அம்பத்தூர் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.