மணல் திருட்டு டிராக்டர் பறிமுதல்
ஊத்துக்கோட்டை: பென்னலூர்பேட்டை அருகேயுள்ள கிருஷ்ணாபுரம் ஏரியில் மண் திருடிய ஐந்து மாட்டு வண்டிகளை எஸ்ஐ நரேஷ் பறிமுதல் செய்தார். இதே போல் பெரியபாளையம் கன்னிகைப்பேர் ஏரியில் மணல் திருட்டில் ஈடுபட்ட 2 டிராக்டர்களையும் போலீசார் கைப்பற்றினர்.‘‘ ஏரி, குளத்தில் மணல் திருட்டு கண்காணிக்கப்படும். திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்கப்படும்‘‘ என்று போலீசார் கூறினர்.