Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2014
24
Jun
ரிசர்வ் வங்கியில் 117 அதிகாரி பணிகள்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

மும்பை ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியாவில் 117 கிரேடு 'பி' அதிகாரி பணியிடங்கள் காலியாக உள்ளன.

பணியின் விவரம்:

கிரேடு 'பி' அதிகாரிகள்.


மொத்த இடங்கள்:

117 (பொது - 58, எஸ்சி - 15, ஓபிசி - 36, எஸ்டி - 8).

வயது:

1.6.2025 அன்று 21 முதல் 30க்குள். (விண்ணப்பதாரர்கள் 02.06,1984க்கு முன்னதாகவோ 1.6.1993க்கு பின்னரோ பிறந்தவர்களாக இருக்கக் கூடாது).

சம்பளம்:

ரூ.21,000 - 1000 - 30,000 இபி - 1000 - 32,000 - 1100 - 36,400 மற்றும் இதர படிகள்.

கல்வித்தகுதி:

ஒட்டு மொத்தமாக அனைத்து செமஸ்டர்களும் சேர்த்து 60 சதவீத தேர்ச்சியுடன் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு அல்லது 55 சதவீத தேர்ச்சியுடன் ஏதேனும் ஒரு முதுநிலை பட்டம் அல்லது 50 சதவீத தேர்ச்சியுடன் ஏதேனும் ஒரு பாடத்தில் பி.எச்டி., அல்லது ஏதேனும் ஒரு பட்டத்துடன் சிஏ/ ஐசிடபிள்யூஏ/ ஏசிஎஸ் அல்லது மேலாண்மை பாடத்தில் முதுநிலை டிப்ளமோ அல்லது எம்பிஏ பட்டம். (எஸ்சி., எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு 50 சதவீத தேர்ச்சி போதுமானது). ஆன்லைன் தேர்வு, எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்ப கட்டணம்:

பொது மற்றும் ஒபிசியினருக்கு ரூ.850. (எஸ்சி., எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.100) இதை பிரத்தியேக செலான் மூலம் ஏதேனும் ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கி மூலம் செலுத்தலாம். மாஸ்டர்/ விசா/ டெபிட்/ கிரெடிட் கார்டுகள் மூலம் செலுத்தலாம். ஆன்லைன் தேர்வு சென்னை, வேலூர், கோவை, ஈரோடு, திருப்பூர், மதுரை, விருதுநகர், திண்டுக்கல், சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய இடங்களில் நடைபெறும். எழுத்துத்தேர்வு தமிழ்நாட்டில் சென்னையில் நடத்தப்படும். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் கடைசி நாள் நேற்றுடன் நிறைவடைந்துள்ளது.

இதர விவரங்களுக்கு www.rbi.org.in என்ற இணையதளம் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

வங்கியில் நேரடியாக கட்டணம் செலுத்த கடைசி நாள் : 26.6.2025

தபாலில் விண்ணப்பம் அனுப்ப கடைசி நாள் : 27.6.2025

தேர்வு நடைபெறும் நாள் : 14.9.2025

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement