மனிதனின் வலிமையின் அடையாளமாக இருப்பது தோள்கள். மனிதனின் அதிக எடை தாங்கும் பகுதி தோள்பட்டைதான் என்றால் அதில் மாற்றுக்கருத்து கிடையாது. எந்தச் சுமையையும் சுமக்கும் சுமைதாங்கி தோள்பட்டை ஆகும். தோள்களின் இயக்கத்தில் முதலில் பாதிப்பது கைகள்தான்.தோள்பட்டை வலி, எலும்பு முறிவு போன்றவை முன்பெல்லாம் கவலைக்கும் பீதிக்கும் உரியவையாக இருந்தன. இப்போது நவீன மருத்துவ முன்னேற்றத்தில் தோள்களின் எந்தப் பிரச்னைக்கும் சிகிச்சை உள்ளன.தோள்பட்டை வலிதோள்பட்டை வலி யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். இதை மூன்று வகையாக பார்க்கலாம். முதலில் வயதானவர்களுக்கு வருவது. தோள்பட்டை தசைகள் இறுகிவிடும். கையை மேலே அசைக்கக் கூட முடியாது. 2வது இளைஞர்களுக்கு மூட்டு விலகி இந்த வலி ஏற்படும். மூன்றாவது நடுத்தர வயதினருக்கு வருவது.பெரும்பாலும் வயதானவர்களுக்கு 75% சர்க்கரை நோயினால் வருகிறது. சர்க்கரை நோயால் தசைகள் இறுகி தோள்பட்டை மூட்டுகள் இறுகப்பட்டு வலி உண்டாகும். இளைஞர்களுக்கு அடிபடுதல், கீழே விழுதல் போன்றவற்றாலும் சிலருக்கு தோள்பட்டையில் கால்சியம் அதிகமாக சேர்ந்து விடுவதாலும் இந்த வலி வருகிறது. பக்கவாதம் வந்தவர்களுக்கும் இந்த பாதிப்பு வரும்.
அறிகுறிகள்கழுத்து பகுதியில் வலி ஏற்படும். கைகள் மரத்து போகும் (உணர்வற்ற நிலை). சுண்டுவிரல் செயலிழந்து போகும். மன எரிச்சல் உண்டாகும். தூக்கமின்மை ஏற்படும். எப்போதும் கோபம் கொள்ளும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். கண் எரிச்சல் உண்டாகும். எழுதும்போது கை விரல்களில் வலி ஏற்படும். படிக்கும்போது கழுத்து வலி உண்டாகும். மேலும் குனியும் போதும், நிமிரும்போதும் தலை சுற்றி கண்ணில் மின்னல் போல் தோன்றி உடல் அதிரும். நரம்புகள் இறுகும். ஒருசிலருக்கு நடக்கும்போது தலை சுற்றல் உண்டாகும்.பித்த உடற்கூறு கொண்டவர்களுக்கு வாந்தி, மயக்கம் உண்டாகும். வாத உடலமைப்பு கொண்டவர்களுக்கு கழுத்து இறுகி திருப்ப முடியாத நிலை ஏற்படும். கப உடலமைப்பு கொண்டவர்களுக்கு கழுத்து பகுதி தடித்து உப்புநீர் கலந்து கருத்துப்போய் பட்டை பட்டையாக தடித்து காணப்படும்.அதிக வியர்வை உண்டாகும்.
கழுத்துப் பகுதியில் எரிச்சல் தோன்றும். ஒரு சிலருக்கு இடது பக்கமாக கழுத்து பகுதியிலிருந்து நீர் கீழிறங்கி தோள்பட்டையில் வலியை உண்டாக்கும். உடற்பயிற்சிகள்சாதாரணமாக 7 முதல் 8 மணி நேரம் வரை கணினியில் அமர்ந்து வேலை பார்க்க வேண்டிய சூழ்நிலையில், 2 மணி நேரத்துக்கு ஒருமுறை எழுந்து, வெளியில் சென்று நடந்து வருவது அவசியம். அத்துடன் தோள்பட்டைக்கு ஏதுவான நாற்காலியைப் பயன்படுத்த வேண்டும்.காலையில் அல்லது மாலையில் நடைப்பயிற்சி செய்யும்போது, கையை முன் பின்னாகச் சுழற்றலாம். இதனால், தோள்பட்டைக்கு கூடுதல் பயிற்சி கிடைக்கும்.இது தவிர யோகா, சூரிய நமஸ்காரம் போன்ற உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். குறிப்பாக, சூரிய நமஸ்காரம் செய்யும்போது, தோள்பட்டைக்கு தேவையான உடற்பயிற்சிகிடைக்கிறது.உணவுபொதுவாக வாயுவின் சீற்றத்தை அதிகரிக்கக்கூடிய உணவுகளைக் குறைத்து எளிதில் சீரணமாகக் கூடிய சத்துள்ள பொருட்களை உண்பது நல்லது. கீரை வகைகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
தவிர்க்க வேண்டிய உணவுகள்: மொச்சை, உருளை, தக்காளி போன்ற வாயுவை உண்டாக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும்.படுக்கைதலையைணை இல்லாமல் தூங்குவது நல்லது. மேடு-பள்ளம் இல்லாத சமமான படுக்கையே நல்லது. அதிக குளிர்காற்று உடலில் படும்படியாக படுக்கக்கூடாது. இத்தகைய நடைமுறைகளை கடைப்பிடித்தால் தோள்பட்டைவாதம் என்ற கழுத்து வலியிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ளலாம்.சிகிச்சை முறைஇப்போதைய சிகிச்சை முறைக்கு கீ ஹோல் சர்ஜரி முறை என்று பெயர். இதன் மூலம் ஆபரேஷன் இல்லாமல் ரத்த சேதாரமில்லாமல், தையல் இல்லாமல் செய்யப்படுகிற சர்ஜரி இது. பேனா முனை போன்ற ஊசியை உட்செலுத்தி கம்ப்யூட்டர் உதவியால் பிரச்சினைக்குரிய பகுதியை ஆராய்ந்து செய்யப்படுகிறது. இந்த சிகிச்சை முறை சுமார் ஒன்றரை மணி நேரத்தில் நடக்கும். தீர்வு
*ஆண்களைவிட பெண்களுக்கு அதிகமாக ஏற்படும் ஃப்ரோசன் ஷோல்டர் பிரச்னைக்கு, சிறந்த தீர்வாக பிசியோதெரபி எனப்படும் உடற்பயிற்சி மருத்துவம் விளங்குகிறது. இதில் சரி செய்ய முடியாதபட்சத்தில், சிறு துளை அறுவை சிகிச்சை (ஆர்த்ரோஸ்கோபி சர்ஜரி) மூலம் இறுக்கத்தைத் தளர்த்தி முழுமையாக குணப்படுத்த முடியும்.
* எனவே தோள்பட்டை வலி வராமல் இருக்க முன்னெச்சரிக்கையுடன் உடற்பயிற்சியை தினமும் மேற்கொள்வது அவசியம்.