சவுகார்பேட்டையில் பரபரப்பு வாலிபரிடம் 7.5 லட்சம் வெள்ளி அபேஸ்
தண்டையார்பேட்டை:சென்னை சவுகார்பேட்டை அனுமந்தராயர் கோயில் தெருவை சேர்ந்தவர் சந்தீப் (35). அதே பகுதியில் வெள்ளி பட்டறை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் நேற்றிரவு 7 மணியளவில் ஊழியர் மாருதி (22), சுமார் 15 கிலோ வெள்ளியை தகடாக மாற்றி, ஒரு பையில் வைத்து கொண்டு என்எஸ்சி போஸ் சாலை வழியாக பட்டறைக்கு நடந்து வந்தார். தங்கசாலை தெரு சந்திப்பில் வந்து கொண்டிருந்தபோது, அந்த வழியாக பைக்கில் வந்த ஒருவர், மாருதி கையில் இருந்த பையை பறித்து கொண்டு சென்றார். அவரை, மாருதி விரட்டி சென்றார். அதற்குள், அந்த பைக் ஆசாமி மின்னல் வேகத்தில் மறைந்துவிட்டார். உடனடியாக சந்தீப்பிடம் இது பற்றி தெரிவித்தார்.இதுகுறித்து சந்தீப் யானைக்கவுனி போலீசில் புகார் செய்தார். கொள்ளைபோன வெள்ளியின் மதிப்பு ரூ.7.5 லட்சம் என கூறப்படுகிறது.