மத்திய பாதுகாப்புத் துறையின் கீழ் உள்ள இந்திய ராணுவத்தில் 5121
படைப்பிரிவில் காலியாக உள்ள 100 குருப் 'சி' பணியிடங்களுக்கு
தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.'
பணி விவரம்:
1. வெஹிக்கிள் மெக்கானிக்: 1 இடம் (பொது).
தகுதி:
மெட்ரிகுலேசன் அல்லது அதற்கு சமமான கல்வித்தகுதி மற்றும் ஆட்டோமொபைல்
டிரேடில் என்சிவிடி சான்றிதழ் அல்லது ஐடிஐ. சம்பந்தப்பட்ட துறையில் 2
ஆண்டுகள் முன் அனுபவம்.
2. சவேவாலா: (பல்நோக்கு பணியாளர்) 2 இடங்கள் (பொது).
தகுதி: மெட்ரிகுலேசன் அல்லது அதற்கு சமமான கல்வித்தகுதி.
தகுதி: பிளஸ்
2 மற்றும் கம்ப்யூட்டரில் ஆங்கிலத்தில் ஒரு நிமிடத்திற்கு 35 வார்த்தைகள்
டைப் செய்யும் திறன் அல்லது கம்ப்யூட்டரில் இந்தி டைப்பிங்கில்
நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் டைப் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
4. கிளீனர்: 3 இடங்கள் (பொது & 2, எஸ்சி & 1).
தகுதி: மெட்ரிகுலேசன் அல்லது அதற்கு சமமான கல்வித்தகுதி.
5. சமையலர்: 3 இடங்கள் (பொது & 2, ஒபிசி & 1).
தகுதி: மெட்ரிகுலேசன் அல்லது அதற்கு சமமான கல்வித்தகுதி.
6. சிவிலியன் மோட்டார் டிரைவர்: 86 இடங்கள் (பொது & 42, எஸ்சி & 23, ஒபிசி & 21).
தகுதி:
மெட்ரிகுலேசன் அல்லது அதற்கு சமமான கல்வித்தகுதி மற்றும் கனரக வாகன
ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பதோடு 2 ஆண்டுகள் டிரைவிங்கில் முன்அனுபவம்
இருக்க வேண்டும்.
7. தார்பாலின் மேக்கர்: 1 இடம் (பொது).
தகுதி: மெட்ரிகுலேசன் அல்லது அதற்கு சமமான கல்வித்தகுதியுடன் சம்பந்தப்பட்ட டிரேடில் சிறப்புத் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
வயது:
வெஹிகிள்
மெக்கானிக், எல்டிசி, கிளீனர், சவேவாலா, குக் மற்றும் தார்பாலின் மேக்கர்
ஆகிய பணிகளுக்கு 8.2.2025 அன்று பொதுப் பிரிவினருக்கு 18 முதல் 25க்குள்.
எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3
ஆண்டுகளும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
சிவிலியன்
மோட்டார் டிரைவர் பணிக்கு 8.2.2025 அன்று பொதுப் பிரிவினருக்கு 18 முதல்
27க்குள். எஸ்சி., எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3
ஆண்டுகளும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
உடற்திறன்
தேர்வு, எழுத்துத்தேர்வு, உளவியல் தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகிய
தேர்வுகளின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
ஒன்றுக்கு மேற்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தனித்தனி
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.