Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2014
03
Feb
எல்லை பாதுகாப்பு படையில் 58 எஸ்ஐ காலியிடங்கள், டிப்ளமோ கல்வித்தகுதி போதும்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் எல்லை பாதுகாப்பு படையில் 58 சப்&இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியுள்ள ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: சப்-இன்ஸ்பெக்டர் (வொர்க்ஸ்):

58 இடங்கள் (பொது - 26, ஒபிசி - 13, எஸ்சி - 11, எஸ்டி - 8). சம்பளம்: ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200. வயது: 30க்குள். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், முன்னாள் ராணுவத்தினர்/ மத்திய அரசு ஊழியர்களுக்கு அரசின் விதிமுறைப் படியும் அதிகபட்ச வயது வரம்பில் சலுகை வழங்கப்படும்.

தகுதி:

சிவில் இன்ஜினியரிங் பாடத்தில் 3 வருட டிப்ளமோ.

உடற்தகுதிகள்:

ஆண்கள் - 165 செ.மீ., (எஸ்டி பிரிவினருக்கு 160 செ.மீ). பெண்கள்: 157 செ.மீ.,
மார்பளவு: ஆண்கள் 76 முதல் 81 செ.மீ.க்குள் இருக்க வேண்டும். 20 வயதிற்கும் குறைவானவர்களுக்கு 2 செ.மீ., சலுகை வழங்கப்படும்.

எடை:

ஆண்கள் - உயரம் மற்றும் வயதிற்கேற்ப எடை இருக்க வேண்டும்.
பெண்கள்- குறைந்தபட்சம் 46 கிலோவுக்கு மேல் இருக்க வேண்டும்.

பார்வைத்திறன்: கண்ணாடி அணியாத நிலையில் 6/6, 6/9 என்ற அளவில் இருக்க வேண்டும்.

எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு, உடற்தகுதி, உடற்திறன்தேர்வு, மருத்துவதகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

தேர்வுக் கட்டணம்:

ரூ.50. DIG & COMMANDANT, STC, BSF என்ற பெயருக்கு Bangalore, SBI AFS Yelahanka (கோடு எண்:2187)ல் மாற்றத்தக்க வகையில் டிடி எடுக்க வேண்டும்.

போஸ்டர் ஆர்டராக எடுத்தால்
DIG & COMMANDANT,
STC,
BSF,
Yelahanka,
Bangalore.
என்ற முகவரிக்கு எடுக்கவும்.

மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.bsf.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

முன்னாள் ராணுவத்தினர் மற்றும் அனைத்துப் பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி :


The Deputy Inspector
General, STC BSF
Bangalore, Yelahanka,
BANGALORE 560 064.
Karnataka.

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran