செல்போனுக்கு எஸ்எம்எஸ் வந்தது நகைக்கடை அதிபர்கள் 50 பேருக்கு கொலை மிரட்டல் கோவையில் பரபரப்பு
கோவை:கோவை நகைக்கடை அதிபர்கள் 50 பேரின் செல்போன்களுக்கு கொலை மிரட்டல் எஸ்எம்எஸ் வந்தது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.கோவை அடுத்த துடியலூரை சேர்ந்தவர் சந்தோஷ் கிருஷ்ணன் (41). கோவையில் உள்ள ஒரு நகைக்கடையில் துணை மேலாளராக பணிபுரிகிறார். இவரது செல்போன் எண்ணுக்கு நேற்று ஒரு எஸ்எம்எஸ் வந்தது. அதில், ‘‘நான் ஒரு கொலைகாரன். உங்களை கொலை செய்வதற்கு ரூ.10 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்பணமாக ரூ.5 லட்சம் பெற்றுள்ளேன். கொலை செய்த பின், மீதித் தொகையை பெற்றுக் கொள்வேன். நீ உயிரோடு இருக்க வேண்டுமென்றால், 48 மணி நேரத்துக்குள் 11 லட்சம் ரூபாய் தர வேண்டும். போலீசுக்கு தகவல் தெரிவித்தால், உனது உயிருக்கு உத்தரவாதம் இல்லை‘ என ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுபற்றி அவர், போலீசில் புகார் செய்தார். கோவை மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினார். அப்போது, கோவையை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட நகைக்கடை அதிபர்கள் மற்றும் மேலாளர்களுக்கு டெல்லியில் இருந்து இது போல் எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டுள்ளது தெரியவந்தது. ஷ்ஷ்ஷ்.sனீsநீணீstமீக்ஷீ.நீஷீனீ என்னும் இணையதள முகவரியில் இருந்து குரூப் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பட்டுள்ளது. எஸ்எம்எஸ் அனுப்ப பயன்படுத்திய செல்போன் எண், தற்போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வழக்குபதிவு செய்து செல்போனில் மிரட்டல் விடுத்த ஆசாமியை தேடி வருகிறார்கள்.