விஜயகாந்த் மகனுடன் நடிக்க பிரபல ஹீரோயினுக்கு வலை
சென்னை:விஜயகாந்த் மகன் சண்முகப்பாண்டியன் ஹீரோவாக நடிக்கிறார்.தேமுதிக கட்சி நிறுவி அரசியலில் குதித்த விஜயகாந்த் அதன்பிறகு நடிப்பதை நிறுத்திக்கொண்டார். அரசி யல் பணி காரணமாக படங்களில் நடிக்க நேரம் கிடைக்க வில்லை என்று அவர் கூறினார். இதையடுத்து விஜயகாந்த் மகன் நடிக்க வருகிறார் என்று தகவல் வெளியானது. ஆனால் தகவல் வெளியாகி 2 வருடம் ஆகியும் அவர் நடிக்கவில்லை. தற்போது அவர் அறிமுக நேரம் நெருங்கிவிட்டது.
விஜயகாந்துக்கு விஜய பிரபாகரன், சண்முகப் பாண்டியன் என 2 மகன்கள் உள்ளனர். இவர்களில் சண்முகப்பாண்டியன் ‘சகாப்தம்‘ என்ற படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் எல்.கே.சுதீஷ் தயாரிக்கிறார். நவீன் கேபிபி கதை எழுதுகிறார். வேலுமணி வசனம் எழுதுகிறார். டி.இ.சந்தோஷ ராஜன் இயக்குகிறார். இதில் சண்முகப்பாண்டியனுக்கு ஜோடியாக நடிக்க பிரபல ஹீரோயின்களிடம் பேசி வருகின்றனர். இப்படத்தின் தொடக்கவிழா வரும் 12ம் தேதி சென்னையில் நடக்கிறது. விஜயகாந்த், பிரேமலதா மற்றும் திரையுலக பிரமுகர்கள், கட்சி பிரமுகர்கள் பங்கேற்கிறார்கள்.