Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2013
13
Aug
தீபிகா படத்தில் ஐஸ்வர்யாராய் குத்தாட்டமா?


மும்பை:தீபிகா படத்தில் ஐஸ்வர்யாராய் குத்தாட் டம் ஆடவில்லை என்றார் பாலிவுட் தயாரிப்பாளர்.அபிஷேக்பச்சனை மணந்த ஐஸ்வர்யாராய் கடந்த 2 வருடமாக நடிப்பதை நிறுத்தி வைத்திருக்கிறார். குழந்தை ஆராத்யாவை கண்ணும் கருத்துமாக வளர்த்து வருகிறார். இந்நிலையில் அவர் மீண்டும் நடிக்க வருகிறார். அதுவும் தீபிகா படுகோன் ஹீரோயினாக நடிக்கும் ‘ராம் லீலா படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடப்போகிறார் என்று பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது. இதைக்கேட்டு பட தயாரிப்பாளரும் இயக்குனருமான சஞ்சய் லீலா பன்சாலி அதிர்ச்சி அடைந்தார்.

இதுபற்றி அவர் கூறும்போது,‘எப்படித்தான் இப்படியெல்லாம் கதை கட்டுகிறார்களோ தெரியவில்லை. முதலில் சோனாக்ஷி சின்ஹா குத்தாட்டம் ஆடப்போகிறார் என்று எழுதினார்கள். பிறகு மாதுரி தீட்சித் பெயரை பரப்பினர். இப்போது ஐஸ்வர்யாராய் பெயரை கிளப்பி விட்டிருக்கிறார்கள். இதில் சிறிதும் உண்மை இல்லை என்றார்.

‘ஐஸ்வர்யா இப்போதுதான் ஸ்கிரிப்ட் கேட்க ஆரம்பித்திருக்கிறார். அதில் சில நல்ல ஸ்கிரிப்ட் இருக்கிறது. எதிலும் நடிக்க முடிவு செய்யவில்லை. ஆனாலும் ஏதாவது எழுதி கோபப்படுத்துகிறார்கள். ஆராத்யாவை வளர்க்கும் பொறுப்பிலிருந்து ஒரு நொடியைகூட அவர் வீணடிக்க விரும்பவில்லை. இந்த சமயத்தில் குத்தாட¢டம் ஆடப்போகிறாரா என்கிறார்கள். அதற்கு வாய்ப்பே இல்லைஎன்று ஐஸ்வர்யாராய் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran