கவுதம் மேனனின் ஸ்கிரிப்ட் பிடிக்காமல் இசை அமைத்தேன்: ஹாரிஸ் ஓபன் டாக்
சென்னை:கவுதம் மேனன் ஸ்கிரிப்ட் பிடிக்காவிட்டாலும் இசை அமைத்தேன் என்றார் ஹாரிஸ் ஜெயராஜ்.கவுதம் மேனன் இயக்கிய ‘காக்க காக்க, ‘வார ணம் ஆயிரம் உள்பட அவரின் பல படங்களுக்கு இசை அமைத்தவர் ஹாரிஸ் ஜெயராஜ். இவர்களுக்குள் கடந்த 2 வருடத்துக்கு முன் மனக்கசப்பு ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் பிரிந்தனர். மீண்டும் இணைவார்களா என்ற கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.
இந்நிலையில் ஹாரிஸ் கூறியது: எங்களுக்குள் வெவ்வேறு கருத்து பரிமாற்றம் இருந்தாலும் நானும் கவுதம் மேனனும் பழகியது சிறப்பான தருணங்கள். இருவரும் நல்ல நண்பர்கள். வாரணம் ஆயிரம் படத்துக்கு பிறகு அவருடன் இணையும் வாய்ப்பு அமையவில்லை. அவர் என்னிடம் ஸ்கிரிப்ட் சொல்லும்போது அது பிடிக்காவிட்டாலும் ஏற்று இசை அமைத்திருக்கிறேன். இப்படி நான் பணியாற்றியது கவுதம் மேனனுக்கு மட்டும்தான். நான் அமைக்கும் இசை பிடிக்காவிட்டால் என் முகத்துக்கு நேராகவே அதை சொல்வார். இப்படித்தான் நாங்கள் பழகினோம். அவருடன் பணியாற்றாமல் இருப்பது எனக்கு இழப்பு இல்லை, ஆனால் அவருக்கு நல்ல படங்களை உருவாகும் திறமை ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறது. அவருடைய வேலை எனக்கு எப்போதும் பிடிக்கும். எதிர்காலத்தில் அவருடன் பணியாற்ற தயாராக இருக்கிறேன். இவ்வாறு கூற¤னார் ஹாரிஸ்.