ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் அரையிறுதியில் ஜோகோவிக்
கனடாவில் நடந்து வரும் ரோஜர் கோப்பை டென்னிஸ் போட்டி ஆண்கள் பிரிவில் செர்பியாவின் ஜேகோவிக் 6-1. 6-2 என்ற நேர்செட்டில் எளிதாக பிரான்சின் ஹாஸ்கட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் ரோனிக்(கனடா) 7-6, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் போராடி குல்பிசை(லத்வியா) தோற்கடித்து அரையிறுதியில் விளையாட தகுதி பெற்றார்.
பெண்கள் பிரிவில் செரீனா வில்லியம்ஸ்(அமெரிக்கா) 6-1, 6-1 என்ற கணக்கில் மக்டலினாவையும்(சுலோவேக்கியா), நா லீ(சீனா) 7-6, 6-2 என்ற கணக்கில் சிபுல்கோவாவையும்(சுலோவேக்கியா), அக்னீஸ்கா ரன்வந்த்ஸ்கா(போலந்து) 7-6, 7-5 என்ற கணக்கில் ஷரா எரானியையும்(இத்தாலி) வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினர். செக்குடியரசின் பெட்ரா விட்டோவோ 6-4, 5-7, 2-6 என்ற செட் கணக்கில் ருமேனியாவின் சொர்னா கிறிஸ்டியாவிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.