Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2013
10
Aug
கிளிப்பிங்ஸ்


டுவிட்டர் போட்டி ஹீரோ

பல்வேறு நடிகர், நடிகைகள் டுவிட்டர், பேஸ்புக்கில் இடம்பெற்றுள்ளனர். தவறாமல் டுவிட் செய்யும் நடிகர்களில் சித்தார்த்தும் ஒருவர். டோலிவுட் ஹீரோ மகேஷ்பாபு, சித்தார்த் இருவரையும் டுவிட்டரில் எவ்வளவு பேர் ஃபாலோ செய்கிறார்கள் என்பதில் போட்டி எழுந்துள்ளது. மகேஷ் பாபுவை இதுவரை 6 லட்சம் பேர் ஃபாலோ செய்கிறார்கள். சித்தார்த்தை 8.4 லட்சம் பேர் ஃபாலோ செய்கின்றனர். விரைவில் மகேஷ் பாபுவை ஃபாலோ செய்யும் ரசிகர்கள் எண்ணிக்கை சித்தார்த்தை மிஞ்சிவிடும் என்று அவரது தரப்பில் கூறப்படுகிறது.

நயன்தாராவின் 10 ஆண்டு

கடந்த 2003ம் ஆண்டு ‘மனஸின்னக்காரே மலையாள படம் மூலம் அறிமுகமானார் நயன்தாரா. இதையடுத்து தமிழில் ‘ஐயா படம் மூலம் அறிமுகமானார். தென்னிந்தியாவில் 4 மொழி படங்களிலும் நடித்திருக்கும் நயன்தாரா, திரையுலகில் நுழைந்து 10 வருடத்தை நிறைவு செய்திருக்கிறார். இதையடுத்து அவருக்கு சக நடிகர், நடிகைகள் வாழ்த்து தெரிவித்தனர்.
டபுள் ஹீரோயின்

‘தீயா வேலை செய்யணும் குமாரு படத்தை அடுத்து சுந்தர்.சி. இயக்கத்தில் திரைக்கு வரவுள்ள படம் ‘மத கஜ ராஜா. விஷால் ஜோடியாக அஞ்சலி, வரலட்சுமி என டபுள் ஹீரோயின் நடித்திருக்கின்றனர். ‘தீயா வேலை... ஹிட்டானதை அடுத்து சுந்தர்.சி இயக்கும் படத்துக்கு மவுசு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து விநாயக சதுர்த்தியான செப்டம்பர் 9ம் தேதி ‘மத கஜ ராஜா ரிலீஸ் செய்ய ஏற்பாடு நடந்து வருகிறது.

சைக்கிள் ராஜா

பெரும்பாலான ஹீரோக்கள் வீட்டிலேயே ஜிம் வைத்து நடை பயிற்சி முதல் கடுமையான உடற்பயிற்சி செய்கின்றனர். இன்னும் சிலர் ஸ்டார் ஓட்டல் ஜிம்முக்கு சென்று பயிற்சி செய்கின்றனர். ‘நான் கடவுள் ஆர்யாவை பொறுத்த வரை நடைபயிற்சியை விட காலை நேரங்களில் பல கி.மீட்டர் தூரத்துக்கு சைக்கிள் ஓட்டி பயிற்சியில் ஈடுபடுகிறார். பழைய மகாபலிபுரம் சாலையில் காலை வேளையில் இந்த சைக்கிள் ராஜா பயணத்தை காணலாம்.

கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran