Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2013
10
Aug
சென்னையில் 2வது நாளாக மழை


சென்னை:சென்னையில் பல இடங்களில் 2வது நாளாக நேற்றிரவும் மழை பெய்தது. கேரளா, கர்நாடகா மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை பெய்து  வருகிறது. இதனால், அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை வெப்ப சலனம் காரணமாக  கடலோர மாவட்டங்கள் மற்றும் தென்மாவட்டங்களில் சில இடங்களில் திடீர் திடீரென கனமழை கொட்டி வருகிறது.

சென்னையை பொறுத்தவரை மதியம் வேளையில் வெயில் சுட்டெரித்து வருகிறது. கடந்த 2 நாளாக இரவு தொடங்கி காலை வரை மழை பெய்து வருகிறது. நேற்று காலை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசாக  மழை பெய்தது.  இன்று காலை ராயப்பேட்டை, சாந்தோம், அடையாறு, திருவான்மியூர், பெரம்பூர், ,  கோயம்பேடு, , சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட  பல பகுதிகளில் மழை கொட்டியது. அதிகாலையில் தொடங்கிய மழை காலை 10 மணி வரை நீடித்தது. இதே போல்,  புறநகர் பகுதிகளிலும்  மழை பெய்தது. இதனால்  அண்ணாசாலை,  கோயம்பேடு மற்றும் பல்வேறு இடங்களில்  கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

 இது குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், வெப்ப சலனம் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதியில் மழை பெய்துள்ளது. அதிக பட்சமாக சென்னை நுங்கம்பாக்கத்தில் 1 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. மீனம்பாக்கத்தில் 6 மி.மீ மழை பெய்துள்ளது‘ என்றனர்.

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran