'ஐயோ நான் சாகவில்லை' மாஜி ரஷ்ய அதிபர் மறுப்பு
மாஸ்கோ: ரஷ்யாவின் முன்னாள் அதிபர் கார்பசேவ், தான் சாகவில்லை என்று மறுத்துள்ளார். ரஷ்யாவின் முன்னாள் அதிபர் மிகைல் கார்பசேவ். இவருக்கு வயது 82. கடந்த சில தினங்களுக்கு முன்பு டுவிட்டர் இணைய தளங்களிலும், ஜெர்மனி பத்திரிகை ஒன்றிலும் இவர் இறந்து விட்டதாக செய்திகள் வெளியாகின. இதனால் உலகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து நோவாயா கெஜட்டா என்ற இணையதள பத்திரிகைக்கு கார்பசேவ் அளித்த பேட்டியில் ‘ஐயோ நான் சாகவில்லை. உயிருடன்தான் இருக்கிறேன். நான் நலமுடன் இருக்கிறேன்Õ என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது உதவியாளர் கூறுகையில், Ôகார்பசேவுக்கு 82 வயதாகிவிட்டதால் கடந்த ஜூன் மாதம் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அதன்பின் அவர் நீரிழிவு உள்ளிட்ட பிரச்னைகளுக்காக சிகிச்சை எடுத்துக் கொண்டார். தற்போது நலமுடன் உள்ளார் என்றார். ரஷ்ய அதிகாரிகள் கூறுகையில், Ôவதந்தியை பரப்பியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்Õ என்றனர்.