இன்று 4வது டெஸ்ட் : எழுச்சி பெறுமா ஆஸி.
இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் இடையே பாரம்பரியமிக்க ஆசஷ் டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. 3வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இதனால் 5 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது.
எஞ்சியுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இங்கிலாந்து அணி தோல்வியை தழுவினாலும் தொடர் சமனில் தான் முடிவடையும். அப்படியொடி நிலை ஏற்பட்டால் கோப்பை இங்கிலாந்து அணிக்கே சென்றடையும். ஏனெனில் கடந்த ஆண்டு ஆசஷ் தொடரை இங்கிலாந்து அணி தான் வென்றிருந்தது.
இந்நிலையில் 4வது டெஸ்ட் போட்டி இன்று பிற்பகல் 3.25 மணிக்கு செஸ்டர் லீ ஸ்ட்ரீட் நகரில் தொடங்குகிறது. தொடர்ச்சியாக 3வது முறையாக கோப்பையை தக்க வைத்துக்கொண்ட மகிழ்ச்சியில் இங்கிலாந்து அணியினர் களமிறங்குகின்றனர். அதேவேளையில் எஞ்சியுள்ள ஆட்டங்களிலாவது வெற்றி பெற்று இழந்த அணியின் செல்வாக்கை நிலைநாட்ட வேண்டும் என்ற நினைப்பில் ஆஸி. வீரர்கள் களம் காண்கின்றனர்.