கமலின் வாரிசு ஸ்ருதிஹாசனை தொடர்ந்து அவரது தங்கை அக்ஷராவும் திரையுலகுக்கு வர முடிவு செய்திருக்கிறார். ஸ்ருதியின் வெற்றி இதற்கு ஒரு காரணமாம். உதவி இயக்குனராக பாலிவுட் படங்களில் பணியாற்றிய அக்ஷரா, தற்போது படங்களில் நடிப்பதற்காக தன்னை தயார்படுத்தி கொண்டிருக்கிறார். தனது பொருத்தமான கதையை தேர்வு செய்ய ஸ்கிரிப்ட்டும் கேட்டு வருகிறாராம்.
இயக்குனர் அதிர்ச்சி
அஜீத் நடித்துள்ள ‘ஆரம்பம்‘ படத்தின் முக்கிய காட்சியை இணையதளத்தில் யாரோ திருட்டுத்தனமாக வெளியிட்டுள்ளனர். இதையறிந்து அதிர்ச்சி அடைந்திருக்கிறார் இயக்குனர் விஷ்ணுவர்தன். ‘அனுமதி இல்லாமல் ஆரம்பம் படத்தின் சில காட்சிகளை இணையதளத்தில் லீக் செய்திருப்பது வருத்தம் அளிக்கிறது. பட யூனிட்டில் உள்ள தொழில்நுட்ப கலைஞர்கள் யாரும் இப்படி செய்திருக்கமாட்டார்கள். காட்சிகளை திருட்டுத்தனமாக வெளியிட்டது யார் என்பதை விசாரித்து வருகிறோம்‘ என்கிறார் இயக்குனர்.
இசையின் ஆடம்பர கார்
இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் பல கோடி மதிப்புள்ள லம்போகினி ஆடம்பர கார் வாங்கி இருக்கிறார். ஆனால், இந்த காரை பட விழாக்களுக்கு கொண்டு வருவதில்லை. யாராவது சின்னதாக ஒரு சிராய்ப்பு ஏற்படுத்தினால் கூட அதை சரி செய்ய லட்சக்கணக்கில் செலவு செய்ய வேண்டும் என்பதால் தன்னிடம் உள்ள வேறு கார்களில்தான் வருவது வழக்கம். ஆனாலும், ‘இரண்டாம் உலகம்Õ பட ஆடியோ விழாவுக்கு லம்போகினி காரில் வந்து அங்கிருந்தவர்களின் கவனத்தை கவர்ந்தார் ஹாரிஸ்.
ஹீரோ வீடு வாடகை
பாலிவுட் ஹீரோ ஷாருக்கான், மும்பையில் பந்தரா பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கி தங்கி இருந்தார். சில ஆண்டுகள் அங்கு வசித்தவர், பின்னர் பங்களா கட்டிக் கொண்டு இடம் மாறிவிட்டார். முதன்முதலாக வாங்கிய வீட்டை அவர் விற்காமல் வைத்திருக்கிறார். இப்போது அந்த வீட்டை வாடகைக்கு விட முடிவு செய்திருக்கிறார். மாத வாடகை ரூ.3 லட்சம், அட்வான்ஸ் ரூ.15 லட்சம். இதே பகுதியில் இதைவிட பெரிய வீடே ஒன்றை லட்சம் ரூபாய் வாடகைக்கு கிடைத்தாலும் இது சினிமா நடிகர் தங்கிய வீடு என்று சொல்லி தரகர்கள் வாடகைக்கு ஆள் தேடிக் கொண்டிருக்கிறார்களாம்.