விஜய்யை ஷூட்டிங் நேரத்தில் தொல்லை செய்யும் காஜல்
சென்னை: ‘ஷூட்டிங் நேரத்தில் விஜய்யை தொல்லை செய்வேன்' என்றார் காஜல் அகர்வால். இதுபற்றி அவர் கூறியதாவது: தமிழில் கார்த்தியுடன் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா', விஜய்யுடன் ‘ஜில்லா' படங்களில் நடித்து வருகிறேன். ‘துப்பாக்கி' படத்தில் விஜய்யுடன் நடித்த போது அவர் அதிகம் பேச மாட்டார். இப்போது நிறைய விஷயங்கள் மனம் விட்டு பேசுகிறார். அவர் பேசாமல் இருந்தாலும் ஏதாவது பேசும்படி தொல்லை செய்து கொண்டே இருப்பேன். தொல்லை பொறுக்க முடியாமல் அவர் பேசுவார்.
எனது தங்கை நிஷா நடிகையாகி இருக்கிறார். வீட்டில் இருக்கும் போது சினிமா விஷயங்களை பேச மாட்டோம். அப்போது தொழில் விஷயத்தை மறந்து விடுவோம். அவளுடன் பொழுது போக்குவது எனக்கு ரொம்ப பிடிக்கும். வெளியூரில் எங்காவது ஷூட்டிங் சென்றால் எங்கு இருக்கிறாள் என்று கேட்டு அங்கு சென்றுவிடுவேன். அவளுடன் நான் போட்டி போடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. எதிர்காலத்தில் அவள் பெரிய ஹீரோயினாகி எனக்கு போட்டியாக கருதப்பட்டாலும் அதை சந்தோஷத்துடன் ஏற்பேன். ஒரு அம்மாவை போல் பெருமை அடைவேன். கட்டிப்பிடித்து வாழ்த்து தெரிவிப்பேன். அந்த நாளை எனது வாழ்வின் பெருமையான நாளாக உணர்வேன். இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.