சீர்காழி கோர்ட் ஊழியர் வீட்டில் 85 பவுன் கொள்ளை
சீர்காழி: சீர்காழியில் வீட்டின் பூட்டை உடைத்து 85 பவுன் நகை, ரூ.55 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றனர். நாகை மாவட்டம் சீர்காழி பொதுப்பணித் துறை அலுவலகம் பின்புறம் வசிப்பவர் பன்னீர்செல்வம் (63). மயிலாடுதுறை கோர்ட்டில் கிளார்க்காக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ஜெயந்தி. நேற்று மதியம் வீட்டின் பீரோவை திறந்து பார்த்த போது, அதில் இருந்த 85 பவுன் நகை ரூ.55 ஆயிரம் கொள்ளை போயிருந்தது. இதுபற்றி சீர்காழி போலீசில் புகார் செய்தார். வீட்டில் கணவன், மனைவி இருவரும் டிவி பார்த்து கொண்டிருந்த போது, மர்ம நபர்கள் உள்ளே நுழைந்து நகை, பணத்தை திருடி சென்றுள்ளனர். இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.