நூலக உறுப்பினர் சேர்க்கை முகாம்
செங்கல்பட்டு:காஞ்சிபுரம் மாவட்ட நூலக ஆணைக்குழு, நின்னைகாட்டூர் பகுதி நேர நூலகம் சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் வகுப்பறை நூலகம் திட்ட தொடக்க விழா, கிழக்கு பொத்தேரி அரசு நடுநிலை பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. கவுன்சிலர் லல்லி முரளி தலைமை தாங்கினார். காஞ்சிபுரம் மாவட்ட நூலக அலுவலர் ராஜேந்திரன் வகுப்பறை நூலக திட்டத்தை தொடங்கி வைத்தார்.
புரவலர்கள் நூலக வாசகர் மன்ற தலைவர் புஞ்சை அரசன், செயலாளர் அரங்ககிரி சந்திரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். 66 மாணவ, மாணவிகளின் உறுப்பினர் சேர்க்கை கட்டணம், 2 புரவலர்களின் நன்கொடை கட்டணம் ஆகியவற்றை மாவட்ட நூலகரிடம் முரளி வழங்கினார்.
இதேபோல், காட்டாங்கொளத்துர் கிளை நூலகம் சார்பில் அரசு உயர்நிலை பள்ளியில் நடைபெற்ற விழாவில் நூலக வாசகர் வட்ட தலைவர் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட நூலகர் ராஜேந்திரன், உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார். நூலகத்தின் அவசியம் குறித்து மாணவர்களுக்கு பொம்மலாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.