பள்ளி மாணவிகளுக்கு அன்னதானம்
கூடுவாஞ்சேரி:சென்னை நந்திவரம்&கூடுவாஞ்சேரி அரிமா சங்கம் சார்பில், தினமும் ஒரு நாள் சேவை திட்டத்தின் கீழ் நந்திவரம் சாரதா சாரிட்டபிள் டிரஸ்ட்டில் உள்ள ஆதரவற்ற பள்ளி மாணவிகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவுக்கு சங்க தலை வர் வெங்கடபதி தலைமை தாங்கினார். சடகோபன், சத்தியநாராயணன் முன்னிலை வகித்தனர். மனோகரன், சந்திர சேகரன், பாலகுரு, பார்த்தசாரதி கலந்துகொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தனர். விழாவில் பாலாஜி, தேவராஜ், சதீஷ்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர். ஆசிரியை கனிமொழி நன்றி கூறினார்.