Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2013
03
Aug
கிளிப்பிங்ஸ்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

ஜெனிலியாவுக்கு தந்தி

கடந்த ஜூலை 14ம் தேதியுடன் இந்தியா முழுவதும் தந்தி சேவை நிறுத்தப்பட்டது. அன்றைய தினம் பலர் கடைசி தந்தி கொடுத்தனர். ஜெனிலியாவுக்கு அன்றைய தினம் ஒரு தந்தி வந்தது. அது அவருடைய கணவர் ரிதேஷ் தேஷ் முக் அனுப்பியதுதானாம். தன் வாழ்வில் பெற்ற முதல் தந்தியும் இதுதான், கடைசி தந்தியும் இதுதான் என்று அதை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார் ஜெனிலியா.
     
ஆட்டோகிராப் வேதிகா

‘பரதேசி படத்தையடுத்து ‘சிங்காரவேலன் படத்தில் நடிக்கிறார் வேதிகா. கோவையில் நடந்த இதன் ஷூட்டிங்கில் பங்கேற்றவர் அந்த ஊரின் இதமான சீதோஷணத்தை வெகுவாக ரசித்தாராம். தினமும் ரசிகர்களின் சந்திப்பும் நடக்க பக்கம் பக்கமாக ஆட்டோகிராப் போட்டுக்கொடுத்தாராம்.

சென்னையில் மனிஷா

‘எடவபதி மலையாள படத்தில் மனிஷா கொய்ராலா நடிக்கிறார். கேன்சர் பாதிப்புக்காக சிகிச்சை பெற அமெரிக்கா சென்றதால் படப்பிடிப்பில் பங்கேற்கவில்லை. ஒரு வருடமாக ஷூட்டிங் முடிவடையாமல் இருக்கிறது. சிகிச்சை முடிந்து மும்பை திரும்பிய மனிஷாவை சந்தித்து கால்ஷீட் பெற இயக்குனர் லெனின் ராஜேந்திரன் சென்றார். அவர் மீண்டும் அமெரிக்கா சென்றதால் ஏமாற்றத்துடன் திரும்பினார். இதையடுத்து தொலைபேசியில் தொடர்பு கொண்ட இயக்குனரிடம், இம்மாதம்  சென்னை வந்து 10 நாட்கள் தங்க உள்ளதால் கால்ஷீட் பற்றி அங்கேயே சந்தித்து பேசுவதாக உறுதி கொடுத்திருக்கிறாராம்.

ராணாவுக்கு சான்ஸ்

ஆர்யா, அனுஷ்கா நடிக்கும் ‘இரண்டாம் உலகம் படத்தையடுத்து தனுஷ் நடிக்கும் படத்தை செல்வராகவன் இயக்குவார் என்று கூறப்பட்டது. தற்போது அந்த சான்ஸ் டோலிவுட் நடிகர் ராணா பக்கம் திரும்பி இருக்கிறதாம். ‘ராணி ருத்ரம்மாதேவி, Ôபாஹுபாலி படங்களில் நடிக்கும் ராணாவை வைத்து வரும் டிசம்பரில் ஷூட்டிங் தொடங்குகிறாராம் செல்வராகவன்.

கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran