பெரியபாளையத்தில் வணிக வளாகம் திறப்பு
ஊத்துக்கோட்டை:பெரியபாளையம் மேம்பாலம் அருகே ஆரணி ஆற்றின் கரையோரத்தில் மே 24ம் தேதி 13 இறைச்சி கடை மற்றும் 3 குடிசைகள், விறகு தொட்டி எரிந்து சாம்பலானது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் ஊராட்சி சார்பில் தங்களுக்கு புதிய கடைகள் கட்டி தர வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். அதன்படி ரூ.4 லட்சம் செலவில் 20 மீன் கடை, இறைச்சி கடைகள் கொண்ட வணிக வளாகம் பெரியபாளையத்தில் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.
ஊராட்சி தலைவர் ராஜா தலைமை வகித்தார். ஒன்றிய குழு தலைவர் அம்மினி மகேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் லதா, ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ் முன்னிலை வகித்தனர். ஊராட்சி தலைவர் கேசவன் வரவேற்றார். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ரவிச்சந்திரன், வணிக வளாகத்தை திறந்து வைத்து பேசினார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மாயாண்டி, முன்னாள் ஊராட்சி துணைத் தலைவர் சீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலாளர் குமரவேல் நன்றி கூறினார்.