நல்லா நடிக்க எடையை குறைக்கணும்: ஹன்சிகா
சென்னை:குண்டாக இருந்த ஹன்சிகா சமீபகாலமாக உடல் எடையை 11 கிலோ குறைத்து ஸ்லிம் ஆகி இருக்கிறார். அவர் கூறியது:
சற்று குண்டாக இருப்பதாக எனக்கே தோன்றியது. நல்ல முறையில் நடிப்பை தொடர்வதற்கு உடல் எடை குறைக்க வேண்டும் என்று எண்ணினேன். நான் சைவ உணவுதான் சாப்பிடுவேன். முன்பெல்லாம் மூக்குபிடிக்க சாப்பிடுவேன். இப்போது ரொம்பவும் குறைத்துவிட்டேன்.
குறிப்பாக கொழுப்பு சத்துள்ள உணவை அறவே தவிர்த்துவிட்டேன். உடற்பயிற்சி தவிர தினமும் நீச்சல் பயிற்சியும் செய்கிறேன். இதுதான் எனது உடல் எடை குறைத்து ஸ்லிம்மாக காரணம். இனிமேல் இந்த தோற்றத்தை பராமரிப்பேன்.நான் அதிகம் பேச மாட்டேன். பார்ட்டிக்கு செல்ல மாட்டேன். ஆனால் நன்றாக தூங்குவேன். தினமும் 8 மணிநேரம் கண்டிப்பாக தூங்க வேண்டும் என்பதை தவறாமல் கடைபிடிக்கிறேன். 9 மணியடித்தால் தூங்க தயாராகிவிடுவேன்.