மிஷ்கினை துரத்திய இளையராஜா
சென்னை:இசை அமைக்க கேட்டபோது என்னை வெளியே துரத்தினார் இளையராஜா என்றார் மிஷ்கின்.‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ என்ற படத்தை இயக்கி நடிக்கிறார் மிஷ்கின். அவர் கூறியதாவது:கூலிக்கு கொலை செய்யும் கொலைகாரன் பற்றிய கதை. ஹீரோ யின் கிடையாது. மாறுபட்ட கதையான இதில் ரீ ரிக்கார்டிங் மிக முக்கியம். இளையராஜா இசை அமைத்தால் பொருத்தமாக இருக்கும் என்று முடிவு செய்து அவரிடம் கேட்க சென்றேன். என் மீது அவருக்கு கொஞ்சம் கோபம் இருந்தது. முதலில் என்னிடம் பேசவே முடியாது என்றார்.
ஆனாலும் போகாமல் அங்கேயே நின்றிருந்தேன். நீண்ட நேரத்துக்கு பிறகு சமாதானம் அடைந்த அவர், ‘சரி ஸ்கிரிப்ட்டை சொல்லு. படத்துல எத்தனை பாட்டு’ என்றார். ‘த்ரில்லிங் சப்ஜெக்ட். பாட்டு கிடையாது’ என்றேன். ‘அப்புறம் எதுக்கு வந்த? வெளியில போ’ என்று டென்ஷன் ஆகிவிட்டார். ‘படத்தில் ரீ ரிக்கார்டிங் ரொம்ப முக்கியம். நீங்கள் இசை அமைச்சாதான் சரியா இருக்கும்’ என்றேன். அதில் சமாதானமான அவர், இசை அமைக்க ஒப்புக்கொண்டார். மற்றொரு ஹீரோவாக ஸ்ரீ, 6 வயது குழந்தை சைதன்யா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு பாலாஜி.வி.