Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2013
09
May
தாய்லாந்து பிரதமர் சினவத்ரா வெப்சைட்டில் ஊடுருவல் அசிங்கமாக கமென்ட்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

பாங்காக்: தாய்லாந்தில் கடந்த 2006ம் ஆண்டு ராணுவ புரட்சி நடந்தது. அப்போது பிரதமராக இருந்த தக்ஷின் நீக்கப்பட்டார். அதன்பின் ராணுவத்தை எதிர்த்து உள்நாட்டில் பல கலவரங்கள் தொடர்ந்து நடந்து வந்தன. கடந்த 2010ம் ஆண்டு நடந்த பாங்காக்கில் தக்ஷின் ஆதரவாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலவரம் வெடித்தது. அப்போது 90 பேர் கொல்லப்பட்டனர். 1,900க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். அதன்பின், ராணுவத்துக்கு எதிராக நாடு முழுவதும் ஆதரவாளர்கள் பெருகின்றனர்.

இதையடுத்து கடந்த 2011ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில், முன்னாள் பிரதமர் தக்ஷினின் சகோதரி யிங்லக் சினவத்ரா போட்டியிட்டு, நாட்டின் முதல் பெண் பிரதமரானார். ஆனால், யிக்லக்கின் ஆட்சியை எதிர்த்தும் கடும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. பிரதமரை பேஸ்புக்கில் கடுமையாக விமர்சித்து கார்ட்டூனிஸ்ட் சாய் ரசாவத் என்பவர் கார்ட்டூன் படம் வெளியிட்டார். அதில், பாலியல் தொழிலாளி தன் உடலை மட்டும்தான் விற்கிறார். இவர் நாட்டையே விற்கிறார்Õ என்ற ரீதியில் கமென்ட் எழுதி இருந்தார். இதையடுத்து அவதூறு வழக்கில் சாய் ரசாவத்தை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், பிரதமர் யிங்லக் சினவத்ராவின் அலுவலக வெப்சைட்டில் மர்ம நபர்கள் ஊடுருவி, அதில் ஏராளமான கமென்ட் அடித்துள்ளனர். அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள், உடனடியாக வெப்சைட்டை மூடிவிட்டனர்.

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran