Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2013
13
Feb
திரும்ப வரும் ஹீரோயின்


நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது...

பவரு காமெடி, கொஞ்ச நாளைக்கு முன்ன மில்க் இயக்கத்த பத்தி பேட்டி கொடுத்தாராம். அதுக்கப்பறம் பவர இயக்கம் கூப்பிட்டனுப்பினாராம். என்ன சொல்லுவாரோன்னு பயந்துகிட்டே போன பவரை தன்னோட படத்துல நடிக்க கேட்டாராம். ஓகே சொன்னவரு ஒப்பந்தம் பத்திரத்த படிச்சி பாத்தாராம். வந்து கையெழுத்துபோடறேன்னு எஸ்கேப் ஆயிட்டாராம். அதுக்கப்பறம் மில்க் இயக்கம் பக்கமே தலைய காட்டலயாம்... காட்டலயாம்... அப்படி என்னதான் அந்த ஒப்பந்தத்துல இருந்துச்சுன்னு கோடம்பாக்கம் பட்சி விசாரிப்பை தொடங்கியிருக்காம்... தொடங்கியிருக்காம்...

முனி படத்தோட பார்ட் 2 மாதிரி பிசா படத்தோட பார்ட் 2 பண்ணப்போறாங்களாம்... போறாங்களாம்... ஆனா ஹீரோ, இயக்கம்னு யாரும் இதுல பங்கெடுக்கலயாம். பார்ட் 2 பண்றளவுக்கு எங்கிட்ட டயம் இல்லனு இயக்கம் சொல்றாராம். கால்ஷிட் தர்ற அளவுக்கு ஹீரோவும் ஃப்ரியா இல்லயாம். ஆனா தயாரிப்பு மட்டும் பார்ட் 2 எடுக்கிறதுல பிடிவாதமா இருக்காராம். எதிர்பாக்கற டீம் கெடக்காட்டி புதுசா ஒரு டீம உருவாக்கி ஷூட்டிங் தொடங்குவேன்னு தயாரிப்பு தீவிரமா இறங்கிட்டாராம்... இறங்கிட்டாராம்...

போன மச்சான் திரும்பி வந்த கதையா கல்யாணத்துக்கப்பறம் கோபி நடிகை நடிப்புக்கு முழுக்கு போட்டாராம்... போட்டாராம்... மேரேஜுக்கப்புறம் நடிக்க வந்த காவ்ய, நவ்ய நடிகைகள பாத்ததும் இவருக்கும் ஆசை வந்துருச்சாம். மறுபடியும் நடிக்க ஒப்புக்கிட்டு மேக்கப்போட ஆரம்பிச்சிட்டாராம்... ஆரம்பிச்சிட்டாராம்...

கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Youtube Dinakaran Live Channel