பேட்மின்டன் போட்டியில் சமந்தா?
சென்னை: பேட்மின்டன் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க சமந்தா முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இப்போதெல்லாம் பேட்மின்டன் விளையாடுவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் சமந்தா. ஒரே நேரத்தில் மணிரத்னத்தின் கடல், ஷங்கரின் ஐ படங்களில் நடிக்க சமந்தா தேர்வாகியிருந்தார். ஆனால் திடீரென அப்படங்களிலிருந்து விலகினார். ஸ்கின் அலர்ஜி காரணமாக ஒரு மாதம் அவர் ஓய்வில் இருந்தார். இப்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். இந்நிலையில் பொள்ளாச்சியில் ஷூட்டிங்கில் இருக்கும் அவர் மாலை நேரங்களில் பேட்மின்டன் ஆடுகிறார். சிறு வயது முதலே பேட்மின்டன் ஆடுவதில் சமந்தாவுக்கு விருப்பம் அதிகமாம்.
அதில் வீராங்கனை ஆவது தான் அவரது ஆசையாகவும் இருந்ததாம். இப்போது மீண்டும் விளையாட்டு பக்கம் தனது கவனத்தை அவர் திருப்பியுள்ளார். இதனால் போட்டிகளில் பங்கேற்கும் விதமாக அவர் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் அதற்கான முயற்சிகளில் இறங்கியிருப்பதாகவும் கோடம்பாக்கத்தில் பேசப்படுகிறது. இது பற்றி டுவிட்டரில் சமந்தா கூறும்போது, பொள்ளாச்சி எனக்கு பிடிக்கவில்லை. போர் அடிக்கிறது. மாலை நேரங்களில் பேட்மின்டன் விளையாடுகிறேன். சினிமாவை போல் ஸ்போர்ட்சிலும் முத்திரை பதிக்க ஆசை உள்ளது. காலம் தான் இதற்கு பத¤ல் சொல்லும் என்றார்.