அரவ.. படத்துல சின்ன ரோல்ல நடிச்ச கவியான அர்ச்ச நடிகைக்கு கோலிவுட்ல ஒரு படத்துல மட்டுமே நடிக்க சான்ஸ் வந்துச்சாம்... வந்துச்சாம்... எதிர்பாத்து வந்தவருக்கு ஏமாத்தமாயிடுச்சாம். மல்லுவுட்லயும் கைநெறய படம் வரலயாம். இன்டஸ்ரிய நம்பிக்கிட்டிருந்தா பொழப்பு நடக்காதுனு சின்னத்திரையிலயும் ஒரு கால் வச்சிருக்காராம். எது ஒர்க்அவுட் ஆகுதோ அதுல ரூட்ட திருப்பிக்குவாராம்... திருப்பிக்குவாராம்...
வேல்டு ஹீரோ படங்கள்ல தொடர்ச்சியா நடிக்கற நாஸ் வில்ல நடிகருக்கு பாலிவுட்லயிருந்து கோலிவுட்ல ரீமேக் ஆகற ...பெல்லி படத்துல நடிக்க கேட்டாங்களாம். இவரும் ஓ.கே சொல்லிட்டாராம். இதுபத்தி பாரின்ல படிச்சிட்டிருக்கற தன்னோட வாரிசுகிட்ட சொன்னப்ப, ‘நீயா டாடி அந்த கேரக்டர்ல நடிக்கற. உனக்கு வயசாயிப்போச்சி, தொந்தி விழுந்துடுச்சி. நீ எப்படி அந்த கேரக்டருக்கு சூட் ஆவே’னு மூஞ்சிலடடிச்சாப்ள கேட்டாராம். வாரிசுகிட்டயிருந்து இந்தபதில எதிர்பார்க்காத நாஸ் வில்லன் ஷாக் ஆயிட்டாராம். அதுக்காக வேஷத்த இழந்திடாம ஏத்து நடிச்சவரு நடிப்பபத்தி வாரிசோட ஒப்பினியன கேக்கற டென்ஷன்ல இருக்காராம்.