குடும்பம் நடத்த வர மறுத்த ஆசிரியை மீது தாக்குதல்
பள்ளிப்பட்டு:குடும்பம் நடத்த வர மறுத்த ஆசிரியையை வீடு புகுந்து தாக்கிய கணவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.பள்ளிப்பட்டு அடுத்த கொண்டம் பகுதியை சேர்ந்தவர் அரி (35). பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இவரது மனைவி சுவாதி (30), அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக இருக்கிறார். இவர்களுக்கு 2007&ம் ஆண்டு திருமணம் நடந்தது. குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, தம்பதியினர் பிரிந்து வாழ்கின்றனர்.
இந்நிலையில் அரி, அவரது அண்ணன் பிரகாஷ், தாய்மாமன் மகன் சோமசேகர் மற்றும் உறவினர்கள் சுப்பிரமணி, கிருஷ்ணய்யா ஆகியோர் நேற்று சுவாதி வீட்டுக்கு சென்றனர். குடும்பம் நடத்த வருமாறு அவரை அரி அழைத்துள்ளார். சுவாதி வர மறுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சுவாதியை தாக்கியதாக கூறப்படுகிறது. சுவாதியின் உறவினர்கள் வந்துவிட்டதால் அனைவரும் ஓடிவிட்டனர்.
இதுகுறித்து சுவாதியின் அம்மா சரஸ்வதி, பொதட்டூர்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். வழக்கு பதிவு செய்து விசாரித்த போலீசார், அரி மற்றும் பிரகாஷை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்றவர்களை தேடி வருகின்றனர்.