ராணுவ ஆள் சேர்ப்பு முகாம் 3 ஆயிரம் பேர் குவிந்தனர்
கோவை பிஆர்எஸ் மைதானத்தில் 110வது பிரதேச ராணுவ படைக்கு, ராணுவ வீரர்கள், டிரேடு மேன் உள்ளிட்ட பதவிகளுக்கான ஆள்சேர்ப்பு முகாம் இன்று துவங்கியது. தமிழகம், ஆந்திரா, கேரளா, புதுவை மாநிலங்களை சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் அதிகமான இளைஞர்கள் குவிந்தனர். அதிகாலை 5 மணி முதலே இளைஞர்கள் நீண்ட வரிசையில் அமர வைக்கப்பட்டனர். உயரம்(165 செமீக்கு மேல்), எடை(50 கிலோ), மார்பளவு (77 செமீ. விரியும் போது 82 செமீ இருக்க வேண்டும்) ஆகியன சோதிக்கப்பட்டு தகுதியான இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தொடர்ந்து 5 நிமிடம் 40 வினாடிக்குள் 1600 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடத்தப்பட்டது. அதில் தேர்ச்சி பெற்றவர்கள் தொடர்ந்து 10 புல்லப்ஸ் எடுத்தால் உடல் தகுதி தேர்வில் தகுதி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர். வரும் 19ம் தேதி வரை முகாம் நடக்கிறது.