ஊத்துக்கோட்டை ஊத்துக்கோட்டையில் 15 வார்டு மக்களுக்கு பொங்கல் பை வழங்கப்பட்டது. ஊத்துக்கோட்டையில் நடந்த விழாவுக்கு வட்ட வழங்கல் அலுவலர் லதா தலைமை தாங்கினார். கவுன்சிலர்கள் அண்ணாதுரை, செல்வராஜ், ஜெகன், பாபா முன்னிலைவகித்தனர். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் பேரூராட்சி தலைவர் மு.ராசமாணிக்கம், துணைத் தலைவர் சேக்தாவூத் கலந்துகொண்டு பொங்கல் பைகளை வழங்கினார். பெரியபாளையம், வடமதுரையில் நடந்த விழாவை ஒன்றியக்குழு தலைவர் அம்மினி மகேந்திரன் தொடங்கி வைத்தார்.தண்டலம், பாலவாக்கம், சூளைமேனி, போந்தவாக்கம், சீத்தஞ்சேரி, மாம்பாக்கம் பகுதியை சேர்ந்த 43ஆயிரத்து 277 குடும்பத்துக்கு பொங்கல் பைகள் வழங்கப்பட்டுள்ளது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook