திருவாரூர் கைதியை அடித்து துன்புறுத்திய வழக்கில் டிஎஸ்பி வெள்ளத்துரை உள்ளிட்ட 6 பேருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து திருவாரூர் கோர்ட் உத்தரவிட்டது. திருவாரூர் அழகிரி காலனியை சேர்ந்தவர் மாட்டு ரவி (40). இவர் மீது திருவாரூர் போலீசில் பல்வேறு வழக்குகள் உள்ளன. 2008ல் நிபந்தனை ஜாமீனில் திருவாரூர் காவல் நிலையத்தில் தினந்தோறும் ரவி கையெழுத்திட்டு வந்தார். அப்போது டிஎஸ்பி வெள்ளத்துரை தலைமையிலான போலீசார் மாட்டு ரவியை போலீஸ் வாகனத்தில் அழைத்து கொண்டு கும்பகோணம் சென்றனர். காரில் சென்றபோது அவரது கால், கைகளில் அடித்து துன்புறுத்தியதாக சென்னை ஐகோர்ட்டில் டிஎஸ்பி வெள்ளத்துரை, இன்ஸ்பெக்டர்கள் சேதுமணி மாதவன், சிவ வடிவேல், சீனிவாசன், சார்லஸ், சிறப்பு எஸ்ஐ தியாகராஜன், ஏட்டு கண்ணன் ஆகியோர் மீது மாட்டு ரவி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு திருவாரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. அதன்படி இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இன்ஸ்பெக்டர் சார்லஸ் மட்டும் ஆஜரானா£ர். டிஎஸ்பி வெள்ளத்துரை உள்ளிட்ட 6 பேரும் ஆஜராகாததால் அவர்களுக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிபதி யூசுப்தீன் ஆர்தீன் உத்தரவிட்டார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook