பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் மோதுகிறது. இதற்கான பாக். அணி அறிவிக்கப்பட்டுள்ளது. உமர்அக்மல், கம்ரன்அக்மல் சகோதரர்கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். விக்கெட் கீப்பராக சப்ராஸ் அகமது சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய தொடரில் அசத்திய முகமது இர்பானுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஸ்டார்க் காயம்
இலங்கைக்கு எதிராக நேற்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான ஸ்டார்க்கிற்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக ரிச்சர்ட்சன் சேர்க்கப்பட்டுள்ளார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook