திருவண்ணாமலை திருவண்ணாமலைக்கு ஆன்மீக சுற்றுலா வந்த வெளிநாட்டுப்பெண் மர்ம காய்ச்சலால் இறந்தார். கனடா நாட்டைச் சேர்ந்தவர் மெல்ஹாபவுபஞ்ச்(34). இவர் கடந்த மாதம் ஆன்மீக சுற்றுலா பயணமாக திருவண்ணாமலைக்கு வந்தார். பெரியபாலியப்பட்டு கிராமத்தில் உள்ள ஒரு ஆசிரமத்தில் தங்கியிருந்தார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு அவர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். அதைத்தொடர்ந்து, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மெல்ஹாபவுபஞ்ச், நேற்று முன்தினம் இறந்தார். இது குறித்து, ஆசிரமத்தின் நிர்வாகி சரத்ஜித், திருவண்ணாமலை தாலுகா போலீ சில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.