Untitled Document
Astrology, astrology chinese, chinese horoscopes, love astrology, Free daily horoscopes, weekly horoscopes, monthly horoscopes
2013
11
Jan
20 ஆண்டாக இல்லாத அளவுக்கு இஸ்ரேலில் பயங்கர பனிப்புயல்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

ஜெருசலேம்: கடந்த 20 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு இஸ்ரேலில் கடும் பனிப் புயல் வீசுகிறது. இதனால் அரசு அலுவலகங்கள், பள்ளிகள் உள்பட எல்லா நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. போக்குவரத்து முடங்கியது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலின் வடக்கு பகுதியில் லெபனான் எல்லை பகுதியில் சில நாட்களாக கடும் பனிப் புயல் வீசுகிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கு பிறகு பனிப்புயல் வீசுவதால் ஜெருசலேம் உள்பட பல பகுதிகள் பனியால் மூடிக் கிடக்கின்றன.

இதனால் அரசு அலுவலகங்கள், பள்ளிகள், தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. சாலைகளில் பனி குவிந்து கிடப்பதால் போக்குவரத்து முடங்கியது. மக்கள் வீடுகளில் இருந்து வெளியில் வர முடியாமல் தவிக்கின்றனர். மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியில் வரவேண்டாம் என்று இஸ்ரேல் அவசர கால நடவடிக்கை துறை அதிகாரிகள் ரேடியோவில் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இஸ்ரேலில் மட்டும் 15 செ.மீ. அளவுக்கு பனி மூடி இருக்கிறது. இதேபோல் பாலஸ்தீனத்தின் வெஸ்பேங்க் பகுதியிலும் கடும் பனிப்பொழிவு உள்ளது.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper  |     |   tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபிரதி எடுக்க  
மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakarana